Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

மூடநம்பிக்கையால் அழிக்கப்படும் எறும்பு தின்னிகள் காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

இயற்கை வாழ்விடத்தில் காணப்படும் எறும்பு தின்னி – வனவிலங்கு பாதுகாப்பின் அவசியம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

பாங்கோலின் எனப்படும் எறும்பு தின்னி செதில்களால் மூடப்பட்ட ஒரே பாலூட்டி வகையாகும். இவை மிகச்சிறந்த பூச்சி கட்டுப்பாட்டாளர் ஆகும். இதன் நீண்ட நாக்கு மற்றும் கூர்மையான நகங்களால் புற்றுக்களை தோண்டி எறும்பு மற்றும் கரையான்களை உண்கின்றன. கோடிக்கணக்கான கரையான் உள்ளிட்ட பூச்சிகள் இவற்றால் வேட்டையாடப்படுவதால் மரங்கள் மற்றும் பயிர்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இவை புற்றுக்களை தோண்டுவதால் மண் காற்றோட்டம் பெறுவதோடு ஊட்டசத்து சுழற்சி நடக்கிறது. இயற்கை சமநிலையினை காப்பதில் இவை பெரும்பங்காற்றுகின்றன.

இந்நிலையில் எறும்பு தின்னியின் செதில்களில் மருத்துவக் குணம் உள்ளதாக கருதி இவை வேட்டையாடப்படுகின்றன. இதன் செதில்கள் கெரட்டின் என்ற புரதத்தால் ஆனவை. இது மனித நகம், முடி மற்றும் காண்டாமிருகக் கொம்பு போன்றவற்றால் ஆன பொருள். நகத்தைப் பொடித்து சாப்பிட்டால் எந்த நோயும் குணம் ஆகாது என்பதைப்போல இதன் செதில்களால் எந்த நோயும் குணம் ஆகாது. ஆனால் பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்யும் நிவாரணியாக செதில் உள்ளதாக பரவிய மூடநம்பிக்கையினால் உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகளில் இவை முதலிடம் வகிக்கின்றன.

சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தேவைக்கென இது சர்வதேச அளவில் கடத்தப்படுகிறது. கடந்த 2009-2017ல் 6000 எண்ணிக்கையிலும் 2018 – 22ல் 1203 கடத்தப்பட்ட எறும்பு தின்னிகள் பிடிபட்டன. இத்தகைய கடத்தலில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது.இதனால் இவற்றின் எண்ணிக்கை வேகமாக சரிந்து இவை அழிவின் விளிம்பில் உள்ளன. இவை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை மட்டும் பிரசவிக்கும் நிலையில் இதன் எண்ணிக்கை எளிதில் அதிகரிக்காத நிலை உள்ளது.

இதன் வாழ்விட அழிப்பு, காடுகள் அழிப்பு, விவசாய விரிவாக்கம், மனித அழுத்தம் காரணமாக இவை அருகி வரும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்று விட்டது. இதனை பாதுகாத்திடும் வகையில் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 ன் படி ஷெட்யூல் 1ன் கீழ் புலிக்கு இணையான உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவை வேட்டையாடவும், வர்த்தகம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மனித மூடநம்பிக்கை காரணமாக இவை தங்கள் வாழ்க்கையினை இழந்து வருகின்றன.

எறும்பு தின்னிகள் இல்லை என்றால் கரையான் எண்ணிக்கை அதிகரித்து காடுகளுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம். இதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து காலப்போக்கில் காட்சிக்கூடத்தில் மட்டுமே இடம் பெறும் நிலைக்கு தள்ளப்படுவது கவலை அளிப்பதாகவே உள்ளது. இத்தகைய நிலையினை போக்கிடும் வகையில் இவை வேட்டையாடப்படுவது முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான நம்பிக்கையால் ஒரு விலங்கினமே அழிந்து வருவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு எஞ்சியவை பாதுகாக்கப்படவும் இவை பெருக அதற்கான வாழ்விடங்கள் உருவாக்கவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எறும்பு தின்னிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது?



மூடநம்பிக்கையால் அழியும் எறும்பு தின்னிகள் – சமூக பொதுநல இயக்கம் கேள்வி



எறும்பு தின்னி வேட்டை மற்றும் கடத்தலைத் தடுக்க வேண்டும்



எறும்பு தின்னிகளின் அழிவைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்



மருத்துவ மூடநம்பிக்கையால் வேட்டையாடப்படும் எறும்பு தின்னிகள்
இயற்கை சமநிலையைக் காக்க எறும்பு தின்னிகளைப் பாதுகாப்போம்



அருகிவரும் எறும்பு தின்னிகள் – வனவிலங்கு பாதுகாப்பு அவசியம்



பாங்கோலின் கடத்தலைத் தடுத்து வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும்



எறும்பு தின்னிகளைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்



எறும்பு தின்னிகள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துமா?