Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

சென்னையில் காலியாக உள்ள கண்டக்டர் பணியிடத்தில் வடமாநிலத்தவர் நியமிக்கும் நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சென்னை மாநகர பேருந்துகளில் காலியாக உள்ள நடத்துனர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் நடவடிக்கை

சென்னை மாநகரப் பேருந்துகளில் காலியாக உள்ள நடத்துனர் பணி இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக 13.1.2026 அன்று டெண்டர் விடப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட டெண்டர் படி இம்மாதம் அதைப் பின்பற்றி உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த எஸ்.எஸ்.எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்திற்கு 11 மாத காலத்திற்கு ரூ 61.56 கோடி தொகைக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அடையாறு மண்டலத்தில் 350 பேர், குரோம்பேட்டையில் 320 பேர், வடபழனியில் 295 பேர், அயனாவரத்தில் 256 பேர் என மொத்தம் 1797 நடத்துனர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒரு பணியாளருக்கு சம்பளத்தொகையாக மாதம் ரூ.27,679 நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் 18% ஜி.எஸ்.டி உள்ளிட்ட தொகை ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் குறிப்பிட்ட பணிநியமனம் செய்யப்பட உள்ள நிலையில் நடத்துனர் பணியில் அதிகப்படியான வட இந்தியர்கள் இதில் நியமிக்கப்படும் நிலையே உள்ளது. இதனால் தமிழக அரசின் வேலைவாய்ப்புக் கொள்கை கேள்விக்குறியாகி உள்ளதோடு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பலகாலமாக வேலை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அரசின் பணியிடங்கள் நிரப்பபடாமல் பலகாலமாக உள்ளதால் இவர்கள் இலவுகாத்த கிளியாக காத்திருப்பதோடு மிகுந்த ஏமாற்றத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் வடமாநிலத்தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இங்குள்ள பல தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கு உள்ளாகி வருவதோடு, பல கோடி பணம் இங்கிருந்து இவர்கள் மூலம் அந்நிய மாநிலங்களுக்கு பரிவர்த்தனை ஆகிறது.

இச்சூழலில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் வகையில் வடமாநிலத்தவர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை தாரை வார்ப்பது கண்டிக்கதக்கது. காலியாக உள்ள பணி இடங்களில் இத்தகைய அணுகுமுறையினை கடைபிடிப்பதின் மூலமாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதுடன் அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் பணி இடஙகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் செயலாகவே கருதுகின்றோம்.

மக்களுடன் நெருங்கிய பணியான குறிப்பிட்ட போக்குவரத்து நடத்துனர் பணியில் லட்சகணக்கான மக்கள் பயணிக்கும் நிலையில் அவர்களுடன் தமிழில் பேசவும், அவர்களது சந்தேகங்களுக்கு பதில் தெரிவிப்பதும் அவசியமான ஒன்றாகும். இப்பணியில் மக்களிடம் இருந்து எந்தவகையிலும் தொடர்பு இல்லாதவர்களை நியமிப்பது இப்பணி சேவையினை பாதிக்கும். சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளுக்கு எதிராகவும், பணி இழப்பு, பாதிப்புகள் போன்றவைகளுக்கு காரணமான இத்தகைய முடிவை தமிழக அரசு கைவிட்டு காலியாக உள்ள போக்குவரத்துக் கழக காலிபணி இடங்களில் நிரந்தர பணியாளர்களை நேரடியாக நியமிக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை பேருந்து நடத்துனர் பணியிட நியமனத்திற்கு எதிர்ப்பு
சென்னை மாநகர பேருந்துகளில் நடத்துனர் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை
நடத்துனர் பணியிடங்களில் ஒப்பந்த நியமனம் - எதிர்ப்பு
சென்னை பேருந்து பணியிடங்களில் நிரந்தர நியமனம் கோரிக்கை
மாநகர பேருந்து நடத்துனர் பணியில் நேரடி நியமனம் கோரிக்கை
சென்னை போக்குவரத்து பணியிடங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கோரிக்கை
பேருந்து நடத்துனர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வலியுறுத்தல்
சென்னை மாநகர பேருந்து பணியிட நியமனத்தில் எதிர்ப்பு
ஒப்பந்த நடத்துனர் நியமனத்தை கைவிட கோரிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் பணியிடங்களில் உரிய நியமனம் கோரிக்கை