சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – ஜூன் 2025

சமூக பொதுநல இயக்க திருவட்டார் ஒன்றிய செயற்குழு கூட்டம் திற்பரப்பு பகுதியில் ஒன்றிய தலைவர் K.ரெங்கசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன், மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ் முன்னிலையில் நடந்தது. பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் C. டைட்டஸ், செண்பை S சிவகுமார், S மரிய சுலோசனா, சாந்தா, ராபர்ட், ஷாஜி, அகஸ்டின் தாஸ், புஷ்பலதா, மேரி, ஷோபா, மகிலர, தங்க ஜாய், கிறிஸ்டி விமலா, ரத்தின பாய், அகிலா,லலிதா, வசந்தா, அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திற்பரப்பு -திருவட்டார் சாலையில் கீழ ஆற்றூர் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் நிலையில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். திற்பரப்பில் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *