குமரி மாவட்டத்தில் சமூக பொதுநல இயக்க ஒன்றிய அளவிலான கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
முஞ்சிறை ஒன்றியம்.
பைங்குளம் பகுதியில் முஞ்சிறை ஒன்றியக்கூட்டம் செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி மாவட்ட பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார். அமைப்பு செயலாளர் N.வினுகுமார், சுற்றுசூழல் மேம்பாட்டு அணி செயலாளர் C.M.ராஜேஷ் சிங், மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் R.ரெவி, அருண் வித்யசாகர், ஜேம்ஸ் பிரவின் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கடை தபால்நிலையம் அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பைங்குளம், வேட்டமங்கலம் சாலை, பரக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருவட்டார் ஒன்றியம்-
திருவட்டார் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் திற்பரப்பு பகுதியில் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன் தலைமையில் நடந்தது. மனநல பாதுகாப்பு பிரிவு மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ், சமூக சீர்திருத்த அணி மாவட்ட செயலாளர் பொன்.மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணிசெயலாளர் R. சாராபாய் மாவட்ட பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார். நிர்வாகி ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
குருந்தன்கோடு ஒன்றியம் –
குருந்தன்கோடு ஒன்றியக்கூட்டம் வில்லுக்குறி பகுதியில் ஒன்றிய தலைவர் V.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் R.ராஜதுரை, P.ராஜையன், N.ராமமூர்த்தி, C.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply