குமரி அறிவியல் பேரவை சார்பில் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியில் என்.வி.கே.எஸ் பள்ளியில் வைத்து உலக அகிம்சை தின விழா நடந்தது. அமைப்பின் தலைவர் முள்ளஞ்சேரி.மு.வேலையன் தலைமையில் நடந்த இவ்விழாவில் சமூகத் தொண்டிற்கான காந்திய சேவை விருது சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவரது கடந்த 40 ஆண்டுகால மக்கள் பணியினை கெளரவிக்கும் விதத்தில் அன்னாருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் என்.வி.கே.எஸ் கல்வி அறக்கட்டளை செயலாளர் Adv.S கிருஷ்ணகுமார், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் Dr.K.விஜயகுமார், பயோனியர் குமாரசாமி கல்லூரி துணை முதல்வர் பேரா. C. பாபு, Dr.D.S. பிரசோபு மாதவன், சமூக சீரமைப்பு நிறுவன இயக்குனர் Dr.D.S.ராம்குமார், குமரி அறிவியல் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
நிகழ்வில் சமூக பொதுநல இயக்க மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply