
🌟 இயக்கத்தின் தொடக்கம்
சமூக பொதுநல இயக்கம் A.S.சங்கரபாண்டியன் அவர்களால் தொடங்கப்பட்டது.
30.04.1988 அன்று இயக்கம் குமரி மாவட்டம்- ஆரல்வாய்மொழியில் தொடக்கவிழா மூலம் முறைப்படி தொடங்கப்பட்டது. ஆனால் 1986 முதலே மக்கள் பணிகள் இதன் மூலம் தொடங்கப்பட்டதுடன் நிர்வாக கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.
🎯 இலக்கு
சமூக மாற்றம் – ஒவ்வொரு மனிதனும் ஒளிமயமான சமூகத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.
🧭 நோக்கங்கள்
- சமூக பொருளாதார மறுமலர்ச்சி
- மூடநம்பிக்கைகளை அகற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல்
- மனிதநேயமும் மக்கள் ஒற்றுமையும் அடிப்படையாகக் கொண்ட அன்பு புரட்சி
🔮 தாரக மந்திரம்
- நற்சிந்தனை
- நற்சொல்
- நற்செயல்
📜 அடிப்படை வாசகம்
- வாழ்க வையகம்
- வெல்க மனிதநேயம்
🤝 உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள்
- தனிமனித ஒழுக்கம் (சுய கட்டுப்பாடு)
- சேவை மனப்பான்மை
- அன்பு செய்தல்
- சகிப்புத்தன்மை (அஹிம்சை)
- எதிர்பார்ப்பு இல்லாத லட்சிய முயற்சி
🧩 கொள்கைகள்
- சுயவளர்ச்சி, சுய பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு போன்றவற்றை வளர்த்தல்.
- சாதி, மத,இன, மொழி, பேதமின்றி சமத்துவ சமுதாயம் ஏற்படவும் மனிதநேய சமூகம் மலர பாடுபடுதல்.
- அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெற விழிப்புணர்வும் முயற்சியும் மேற்கொள்ளுதல், மக்களின் தேவைகளை,பிரச்னைகளை, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்றி மக்கள் பயன்பெற பாடுபடுதல்.
- சமூகத்தில் பின்தங்கியவர்கள், நலிந்தோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் முதியோர் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது.
- மது, ஊழல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்வது, சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவற்றை களைய பாடுபடுவது.
- சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தடுக்கவும், இயற்கை நேய சமுதாயம் மலரவும் பாடுபடுவது.
- மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வது
- கலை, இலக்கியம் கல்வி, கலாச்சாரம்,விளையாட்டு இவற்றை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் பாடுபடுதல்.
- விவசாயிகள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளிகள் மேம்பாட்டிற்கென திட்டங்கள் வகுத்து செயல்படுவது.
- இயற்கை மருத்துவம், சுகாதாரம் மற்றும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மேற்கொள்தல்,பாதிக்கப்படும் நுகர்வோர் மற்றும் மனித உரிமை தொடர்பாக தீர்வுகாண பாடுபடுதல்.
- தேசபற்று, தியாகமனப்பான்மை/சுய ஒழுக்கம்/ தன்னம்பிக்கை/கட்டுப்பாடு உடையவர்களாக உருவாக்கிட பாடுபடுதல். உலக அமைதி, மக்கள் ஒற்றுமை ஏற்பட முனைவது.
- மக்களையும், இயற்கையினையும் ஆதாரமாக கொண்ட மாற்று வளர்ச்சிப் போக்கு ஏற்பட முயல்வது. மாற்று அரசியல் மூலமாக மக்கள் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது.
🧭 நிர்வாகிகளின் கடமைகள்
- மக்களை சந்தித்தல்
- மக்களுக்காக சிந்தித்தல்
- மக்கள் பிரச்னைகளுக்காக போராடுதல்
- மக்களை இயக்கமாக ஒருங்கிணைத்தல்
- மக்கள் தங்களது திட்டங்களை தாங்களே தீர்மானித்து செயல்படுத்திட வழிகாட்டுதல்.
📢 உங்கள் உரிமைக்காக குரல் கொடுங்கள். சமூக நலத்துக்காக ஒன்றிணைக!
🏢 தலைமைச்செயலகம்
சமூக பொதுநல இயக்கம்.
