ஆவணத் திருட்டுகள் மூலம் மின்வாரிய ஊழல்கள் அம்பலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம், டெண்டர் முறைகேடுகள் மற்றும் கொள்முதல் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமூக பொதுநல இயக்கம் முன்வைத்துள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.