வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிணறு ஆக்கிரமிப்பால் மறைந்து போனதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுச் சொத்துக்களை பாதுகாக்கவும், கிணற்றை மீட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.