மேகமலையில் குவியும் குப்பை மலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் கவலை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான மேகமலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவது இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. கழிவு மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்தி, குப்பை கொட்டுதலை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் கோரியுள்ளது.