தனியார் பள்ளிகளின் வழிப்பறிக் கொள்ளைக்கு கட்டண அறிவிப்பு மட்டும் தீர்வு ஆகுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி பல்வேறு மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் அரசின் புதிய உத்தரவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதை நடைமுறையில் அமல்படுத்த கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் அவசியம் என சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது.