ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும் நீர்வள சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.