கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த அரிய பாரம்பரிய தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் மண்டலமாக அறிவித்து, நவீன தொழில்நுட்பங்களுடன் அகழாய்வை தொடரவும், திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றவும் சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.