குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம், கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.