ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருள் என உலக சுகாதார அமைப்பும், IARC நிறுவனமும் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகள் தடை விதித்துள்ள இந்த பொருளை இந்தியாவிலும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.