குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் புகார்.
குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் தகுதியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டதோடு, உயிருடன் உள்ளவர்களும் இறந்தவர்களாகக் கருதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் வெளிப்படையாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெற வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.